2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

உயிலங்குளம் மாதிரி வீட்டுத்திட்ட தேவைகள் நிவர்த்தி செய்யப்படும்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 24 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்திற்குட்பட்ட உயிலங்குளம் மாதிரி வீட்டுத்திட்டத்திற்கான தேவைகள் படிப்படியாக நிவர்த்தி செய்யப்படுமென துணுக்காய் பிரதேச செயலாளர் எஸ்.குணபாலன் தெரிவித்தார்.

மேற்படி பகுதியில் 2012ஆம் ஆண்டிலிருந்து மக்கள் மீள்குடியேற்றப்பட்டததைத்; தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 50 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.

மேற்படி பகுதியில் அடிப்படைத் தேவையாகவுள்ள  குடிநீர் வசதியை  ஏற்படுத்தித் தருமாறும்  சேதமடைந்துள்ள  வீதிகளை புனரமைத்து  போக்குவரத்தை இலகுவாக்கித் தருமாறும் இப்பகுதி மக்கள் கேட்டுள்ளனர்.

இது தொடர்பில் துணுக்காய் பிரதேச செயலாளரிடம்  கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

குடிநீர் தேவைக்காக குறித்த பிரதேசத்தில் குழாய்க் கிணறுகள் மற்றும் திறந்த கிணறுகளை  அமைக்கப்படவுள்ளன. எதிர்காலத்தில்  வீதிகளும் புனரமைக்கப்படுமெனவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .