2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மன்னார் எல்லை பலவந்தமாக கைப்பற்றப்பட்டது

Kanagaraj   / 2014 மார்ச் 25 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வில்பத்து சரணாலயத்தின் வடக்கு பிரதேசத்திலுள்ள முள்ளிக்குளம் பகுதியில் மன்னார் எல்லையை சுத்தம்செய்;து அங்கு 300 குடும்பங்கள் கூடாரங்களை அமைத்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தில் இருக்கின்ற பிரபல அரசியல்வாதியே இந்த செயற்பாடுகளுக்கு பின்னால் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டுக்குள் தனியான முஸ்லிம் வலயங்களை நிர்மாணிக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நடவடிக்கை எடுத்து வருகின்றார் என பொது பல சேனா அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

வில்பத்து சரணாலயம் தற்போது அழிக்கப்பட்டு வருகின்ற நிலையில், வில்பத்து முதல் மன்னார் வரையில் எஸ்.எச் ஜஸஸ்மின் சிட்டி என்ற பெயரில் பாரியதொரு வீடமைப்புத் திட்டம் அமைச்சர் ரிஷாட் தலைமையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

இந்த வீடமைப்புத் திட்டத்துக்கு அரசாங்கத்தின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை என்று பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் வண. குலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த 20 ஆம் திகதி குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .