2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் விபத்தில் ஐவர் காயம்

Kanagaraj   / 2014 மார்ச் 25 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியா நுகர்வோர் அதிகாரசபையினர் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார்  நீதிமன்றில் இன்று இடம்பெற்ற வழக்கொன்றில் பிரசன்னமாகுவதற்காக வவுனியா மாவட்ட செயலகத்தின் வாகனமொனறில் பயணித்த நுகர்வோர் அதிகாரசபையின் வவுனியா மவட்ட பொறுப்பதிகரி எம். ராஜபக்ச உட்பட ஐவரே காயமடைந்துள்ளனர்.

வழக்கு விசாரணைகளை நிறைவு பெற்றதன் பின்னர் வவுனியா நோக்கி வந்த சமயம் குறுக்கள்புதுக்குளம் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்த ஐவரும் வவுவுனியா பொது வைத்திசாலையின் விபத்து பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .