2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஆணைக்குழு கிளிநொச்சியில் ஏப்ரல் விசாரணை

Kanagaraj   / 2014 மார்ச் 25 , பி.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் வடக்கு மாகாணத்திற்கான இரண்டாம் அமர்வு ஏப்ரல் மாதம் 7,8,9 ஆம் திகதிகளில் கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலகத்தில் நடைபெறும். என்று காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

1990 – 2009 ஆம் ஆண்டு கால அசாதாரண சூழ்நிலையின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னெடுத்துவருகிறது. 

வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆணைக்குழுவின் முதற்கட்ட விசாரணைகள் ஓரளவு பூர்த்தியடைந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் வடக்கு மாகாணத்தில் இரண்டாம் கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் அதிகாரியும் இணைப்பாளருமான ரீ. ஆர். கெல்லி தெரிவித்தார்.
 
கடந்த  ஜனவரி 18-21 ஆம் திகதிகளில் வடக்கு மாகாணம்  கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்ட முதற் கட்ட விசாரணையில் 440 முறைப்பாடுகள் ஆணைக் குழுவிற்குக் கிடைக்கப்பெற்றிருந்தன என்று அவர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட மூன்று தினங்களிலும் தாங்கள் சுமார் 150 இற்கு மேற்பட்ட முறைப்பாடுகளை விசாரிக்க உத்தேசித்திருப்பதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச். டபிள்யூ. குணதாச தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகமகே, திமிங்கு பட்டதுருக்கே பிரியந்தி சுரஞ்சனா வித்தியாரத்ன, மனோ ராமநாதன் ஆகியோரை உள்ளடக்கிய விசாரணைக் குழுவினரே விசாரணைகளை மேற்கொண்டு ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.
 
இந்த ஆணைக்குழுவின் விசாரணைக் காலக்கெடு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .