2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

துவிச்சக்கர வண்டிகளுக்கான உரிமத்தகடுகள்

Super User   / 2014 மார்ச் 26 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம், பாஸ்கரன்

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பகுதியில் துவிச்சக்கர வண்டிகளுக்கு இவ்வாண்டிற்கான உரிமத்தகடுகள் வழங்குவதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ரவீந்திரநாதன் இன்று (26) தெரிவித்தார்.

இதனால் துவிச்சக்கர வண்டிகளை வைத்திருப்பவர்கள் கரைத்துறைப்பற்று பிரதேச சபை, மற்றும் முல்லைத்தீவு, முள்ளிவளை, செம்மலை, அலம்பில், கொக்குளாய், முள்ளியவளை ஆகிய உப பிரதேச சபை அலுவகங்களில் ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக 20 ரூபா செலுத்தி இந்த உரிமத்தகடுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .