2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தரிப்பிட கட்டணம் செலுத்தாத உரிமையாளர்களுக்கு சட்ட நடவடிக்கை

Kogilavani   / 2014 மார்ச் 28 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி நகர் பகுதியில் தரிப்பிட கட்டணம் செலுத்தாத வாகன உரிமையாளர்களுக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து(31) சட்ட நடவடிக்கை  எடுக்கப்படும் என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் நா.வை.குகராஜா வெள்ளிக்கிழமை(28) தெரிவித்தார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள முச்சக்கர வண்டிகள், கன்டர் ரக வாகனங்கள், உழவு இயந்திரங்கள், கார்கள் மற்றும் வாடகைக்கு அமர்த்தப்படும் வாகனங்கள் ஆகியவற்றிற்கான வாகன உரிமையாளர்கள் தரிப்பிட கட்டணத்தினை செலுத்தாத பட்சத்தில் அவர்களுக்கு எதிராக பிரதேச சபையின் 1987 இன் 15 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .