2025 ஜூலை 21, திங்கட்கிழமை

நாகபடுவான் குளத்தில் நீர் வற்றியது: விவசாயிகள் அவதி

Kogilavani   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 9 பாரிய நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றான ஹரியாலை நாகபடுவான் குளத்தின் நீர்மட்டம் 2 அங்குலம் மாத்திரம் இருப்பதால் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.விகிர்தன் வியாழக்கிழமை (10) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள 10 அடி கொள்ளளவுடைய மேற்படி குளத்தின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதுடன், இன்னும் ஒரிரு வாரத்தின் குளம் வரண்ட நிலமாக மாற்றமடையவுள்ளது.

அக்குளத்தினை நம்பி 367 விவசாயிகள் காலபோக நெற்செய்கையினை மேற்கொண்ட போதிலும் மழையின்மையினால் அதனை அறுவடை செய்யமுடியவில்லை.

இக்குளத்தின் நன்னீர் மீன்பிடியினை நம்பி 86 குடும்பங்கள் இருக்கின்றபோதும் இக் குளம் முற்றாக வற்றுவதினால் மீன்பிடியாளர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

மேலும், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் கால்நடைகளை வளர்த்து வருகின்றமையினால் கால்நடைகளுக்கான உணவு மற்றும் அவற்றிற்கான நீர் என்பன சவால் நிறைந்ததாகக் காணப்படும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

இப்பிரதேச மக்களின் குடிநீர் தேவையினை பூநகரி பிரதேச சபை நிறைவேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .