2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சிறுவர் நலவாழ்வுக் கட்டிடம் திறந்துவைப்பு

Super User   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    எஸ்.குகன்


கிளிநொச்சியில் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் அமரர் அபிராமி விமலதாசன் நினைவாக அவரது குடும்பத்தால் 10 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சிறுவர் நலவாழ்வுக் கட்டிடத்தை புதன்கிழமை (13) மாலை திருமதி.சி.விமலதாசன் திறந்து வைத்தார்.

சிறுவர்களின் நலன்களை பேணும் நோக்கத்துடன் அமைக்கப்பட்ட இந்தக் கட்டிடத்தில், சிறுவர்கள் உடல்நலமின்மை, நோய்வாய்படும் போது அவர்களை சிறப்பாக பராமரித்து உடல்நலத்தை பேணுவதற்குரிய வசதிகளும் காணப்படுகின்றன.

இந்தத் திறப்பு விழா நிகழ்வு நோட்டோ நிறுவனத்தலைவர் செ.பத்மநாதன் (கே.பி) தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X