2025 ஜூலை 17, வியாழக்கிழமை

முல்லை சாலையில் ஆளணி பற்றாக்குறை

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 14 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

இலங்கை போக்குவரத்துச் சபையின் முல்லைத்தீவுச் சாலைக்கு ஆளணிப் பற்றாக்குறை நிலவும் அதேவேளை, பேருந்து வசதிகளும் இல்லாமல் இருப்பதாக முல்லைத்தீவு சாலை நிர்வாகம் வியாழக்கிழமை (14) தெரிவித்தது.

முல்லைத்தீவுச் சாலையின் செயற்பாடுகள் தொடர்பாக சாலை நிர்வாகத்திடம் வினவியபோதே நிர்வாகம் இவ்வாறு தெரிவித்தது. இது தொடர்பில் அந்நிர்வாகம் மேலும் கூறியதாவது,

மிகவும் துரித சேவைகளை வழங்கிவந்த இலங்கை போக்குவரத்து சபையின் முல்லைத்தீவு சாலை, கடந்த 1990ஆம் ஆண்;டின் பின்னரான யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு செயலிழந்தது.

இதனையடுத்து, 20 வருடங்களின் பின்னர் 2010ஆம் ஆண்டில் மீண்டும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும், 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் சாலையில் இருந்த வளங்கள் கூட தற்போது இல்லாத நிலை காணப்படுகின்றது.

முல்லைத்தீவின் போக்குவரத்துத் தேவைகளுக்கு 33 பேருந்துகள் தேவையான போதும், தற்போது 13 பேருந்துகள் மட்டுமே சாலையிடம் உள்ளன.

அவற்றில், 12 பேருந்துகள் மட்டுமே, சேவைகளில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பேருந்து சாரதியில்லாமையினால் சேவையை மேற்கொள்ளாமல் இருக்கின்றது.

இதனால் கற்சிலைமடு, துணுக்காய், ஒட்டுசுட்டான், முத்தையன்கட்டு, குமுழமுனை, மாத்தளன், கொக்கிளாய் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் உரிய போக்குவரத்து சேவைகளை வழங்க முடியாதுள்ளது என நிர்வாகம் மேலும் தெரிவித்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X