2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இளநீர் பறித்தவர் பலி

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரத்தினம் கனகராஜ்

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கற்சடம்பன் பகுதியில் இளநீர் பிடுங்குவதற்காக வெள்ளிக்கிழமை (15) காலை மரத்தில் ஏறியவர் தவறி வீழ்ந்து மரணமடைந்ததாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் மதியழகன் (வயது 40) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

புளியங்குளம் முத்துமாரியம்மன் ஆலயத் திருவிழாவிற்கு இளநீர் பிடுங்குவதற்காக தென்னை மரத்தில் ஏறிய நபர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்தார்.

தொடர்ந்து, மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மேற்படி நபரது உயிர் பிரிந்தது.
இதனையடுத்து, அவரது சடலம் தற்போது. கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X