2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வரட்சியால் அழிவடையும் வான் பயிர்கள்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவும் கடும் வரட்சி காரணமாக தென்னை, பலா, தோடை, எலுமிச்சை போன்ற வான் பயிர்களும் அழிவடைந்து வருவதால் அதனை நம்பி வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வரட்சியால் கிளிநொச்சி மாவட்டத்தின் தோட்டப் பயிர்கள் மற்றும் விவசாயப் பயிர்கள் என்பன அழிவடைந்துள்ளன.

இந்நிலையில், வறட்சியை ஓரளவேனும் தாக்குப் பிடிக்கக்கூடிய வான் பயிர்கள் தப்பியிருந்தன. ஆனால், வரட்சி தொடர்ந்தும் நிலவுவதனால் வான் பயிர்களும் தற்போது அழிவடைந்து வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின், சாந்தபுரம், அம்பாள்நகர், திருவையாறு, வட்டக்கச்சி, கல்மடுநகர், ஸ்கந்;தபுரம், மணியங்குளம், ஐயனார்புரம், வன்;னேரிக்குளம், ஆனைவிழுந்தான், கண்ணகிபுரம், சுபாஸ்குடியிருப்பு ஆகிய பகுதிகளிலே வான் பயிர்களான தென்னை, பலா, தோடை, எலுமிச்சை மரங்கள் அதிகளவில் இருக்கின்றன. இவையே தற்போது அழிவடைந்து செல்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X