2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மடு வான் பரப்பில் மர்ம விமானம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார், மடு திருத்தலத்தின் ஆவனி மாத திருவிழா இன்று வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, பக்தர்கள் கூடி நின்ற ஆலயத்தின் முன் பகுதி மேல் வானில் சிறிய ரக விமானம் ஒன்று பறந்தது.

குறித்த சிறிய ரக விமானத்தின் மேல் பகுதியில் நான்கு விசிறிகள் சுற்றிக்கொண்டிருந்த நிலையில் குறித்த விமானம் குறிப்பிட்ட ஒரு பகுதியை மையப்படுத்தியே சுற்றிக்கொண்டிருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இரைச்சலுடன் சுற்றிக்கொண்டிருந்த குறித்த விமானம் மடுத்திருவிழா திருப்பலி நிறைவடைந்த பின் அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

குறித்த சிறிய ரக விமானம் எதற்காக ? யாரால் பறக்கவிடப்பட்டது? என்ற விடயம் இதுவரை தெரியவில்லை.

இவ்வகையான சிறிய விமானங்களை பயன்படுத்தி வீடியோக்களை எடுக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. இவற்றை பந்தொம் கமெரா என்றழைப்பர். ஆகையினால், இந்த பந்தொம் கமெராவினைப் பயன்படுத்தி எவராவது வீடியோ எடுத்திருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியிருப்பினும், இவ்வகையான கருவிகளைப் பயன்படுத்துவதற்கு முன்னனுமதி பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X