2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இரணைமடு மூலம் மேற்கொள்ளப்பட்ட சிறுபோகம் வெற்றி

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 17 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோக பயிர்ச் செய்கைகளில் சரியான நீர் முகாமைத்துவம் பின்பற்றப்பட்டமையால் பயிர்ச்செய்கை வெற்றியளித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் என்.சுதாகரன் ஞாயிற்றுக்கிழமை (17) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தின் கீழ் வருடாந்தம் 8 ஆயிரம் ஏக்கர் வரையான நிலப்பரப்பில் சிறுபோக செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை வழமை.  கடந்த ஆண்டும் (2013), இந்த ஆண்டும் (2014) நிலவிய எதிர்பாராத கடும் வரட்சி காரணமாக குளத்தின் நீர் அளவைக் கொண்டு 800 ஏக்கர் நிலப்பரப்பில் மாத்திரம் சிறுபோகச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இம்முறை சிறுபோகச் செய்கைக்கான கூட்டத்தீர்மானம் எடுக்கும் போது இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் 13 அடி 9 அங்குலமாக இருந்;தது. சிறுபோக பயிர்ச் செய்கை ஆரம்பிக்கும் போது ஏப்ரல் மாதத்தில் பெய்த மழையை அடுத்து நீர் மட்டம் 15 அடி 2 அங்குலமாக இருந்தது.

இந்த 800 ஏக்கர் சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டு அவற்றிற்கான நீர் விநியோகம் வழங்கப்பட்டு, நிறுத்தப்பட்;ட நிலையில் தற்போது இரணைமடுவின் நீர் மட்டம் 10 அடி 6 அங்குலமாக உள்ளது.

இவ்வாறு குளத்தின் நீரை பாதுகாத்து சரியான நீர் முகாமைத்துவம் பேணப்பட்டமையால் இச்சிறுபோக நெற்செய்கை மற்றும் அதன் ஊடான சிறுதானியம் என்பனவும் வெற்றியளித்துள்ளது. அத்துடன், நிலத்தடி நீரும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், எதிர்வரும் காலபோக நெற்செய்கைக்குத் தேவையான விதை நெல்லில் 40 வீதமான விதை நெல்லினைத் சிறுபோகத்தின் மூலம் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X