2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், முல்லைத்தீவு விஜயம்

George   / 2014 ஓகஸ்ட் 17 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

மாங்குளத்தில் சுற்றுலா நீதிமன்றம் ஒன்றை விரைவில் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றிற்கு கடந்த வெள்ளிக்கிழமை முதற் தடவையாக விஜயம் செய்த பிரதம நீதியரசர் அங்கு உத்தியோகத்தர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முல்லைத்தீவிலிருந்து அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யக் கூடிய தொழில்நுட்ப வசதிகளை விரைவில் செய்து கொடுப்பதாகவும் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல வருடங்களாக திறந்து வைக்கப்படாத நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினை பிரதம நீதியரசர் கடந்த வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, சட்டத்தரணிகளின் சங்கத் தலைவர் கங்காதரன், மற்றும் ஏனைய சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், சட்ட உதவி ஆணைக்குழு சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X