2025 ஜூலை 17, வியாழக்கிழமை

முத்தமிழ் சங்கமம் நிகழ்வு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் முத்தமிழ் சங்கமம் நிகழ்வு சனிக்கிழமை (16) மாலை 2.00 மணியளவில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் கோவில் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது வீராச்சாமி கரன் குழுவினரின் மங்கள வாத்தியம், பூந்தோட்டம் நர்த்தனாலய மாணவர்களின் நடனம், திருமதி ர. அருந்ததியின் மாணவர்களது இசையமுதம், வாத்திய கலாலய மாணவர்களின் வயலின் இசை, கவிஞர் குரும்பையூர் த. ஐங்கரன் தலைமையில் சிறப்பு கவியரங்கமும் வவுனியா மாவட்ட தமிழ் சங்க செயலாளர் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் சிறப்பு பட்டி மன்றமும் கூமாங்குளம் சிதம்பரேஷ்வரம் நாட்டிய பள்ளி மாணவர்களின் எங்கள் தமிழ் எங்கே என்ற நாட்டிய நாடகமும் இடம்பெற்றது.

வவுனியா சிந்தாமணி பிள்ளையார் கோவில் கலாசார பேரவையின் தலைவர் சைவ சித்தாந்த முதுமானி சிவ. கஜேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளை நிலைய தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் முதன்மை விருந்தினராகவும், பேராதனை பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் பேராசிரியர் வ.மகேஸ்வரன்; பிரதம விருந்தினராகவும், யாழ். பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் கி.விசாகரூபன் சிறப்பு விருந்தினராகவும், சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஸ்தாபகர் சி.கணேஷ்குமார்  விசேட விருந்தினராகவும் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, செட்டிக்குள பிரதேச செயலாளர் என்.கமலதாசன், நெடுங்கேணி பிரதேச செயலாளர் கா.பரந்தாமன் ஆகியோர் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X