2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வறுமையின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு நிதியுதவி: தேவகுமார்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிரமங்களில் வறுமையின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கும் நிதியுதவி வழங்கவுள்ளதாக கரைத்துறைப்பற்று சமூர்த்தி மகா சங்க முகாமையாளர் எம்.தேவகுமார் சனிக்கிழமை (16) தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மது ஒழிப்பு மற்றும் புகைத்தல் வாரத்தின் போது, கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் கீழ் கடமையாற்றும் வெளிக்கள சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால், கொடி விற்பனை மற்றும் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் நிதி எமது பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராம மக்களுக்கே பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

எனவே, பெண் தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கும் குடும்பங்கள், யுத்தத்தினால் அங்கவீனர்களாக்கப்பட்டவர்கள், பெற்றோர்களை இழந்து கல்வி பயிலும் மாணவர்கள் என கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட 46 கிராம சேவகர் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கும், மாணவர்களுக்கும் இக்கொடுப்பனவுகள் மானிய முறையில் வழங்கப்படவுள்ளன.

எனவே, ஒவ்வொரு கிராமங்களிலும் கடமையாற்றும் வெளிக்கள சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக குடும்பங்களின் பெயர் விபரங்கள் கோரப்பட்டுள்ளதுடன், அவை பரீசிலிக்கப்பட்ட பின்னர் கரைத்துறைப்பற்று சமூக அபிவிருத்தி மன்றத்தினூடாக உரியவர்களுக்கு நிதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X