2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தட்டுவன்கொட்டியின் தேவைகள் படிப்படியாக நிவர்த்தி செய்யப்படும்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கண்டாவளை, தட்டுவன்கொட்டிக் கிராமத்தின் அடிப்படைத் தேவைகள் படிப்படியாக நிவர்த்தி செய்யப்படும் என கண்டாவளைப் பிரதேச செயலகம், திங்கட்கிழமை (18) தெரிவித்தது.

300 வருடங்கள் பழமை வாய்ந்த தட்டுவன்;கொட்டிக் கிராமத்தில், தற்போது வசிக்கும் 95 குடும்பங்கள், தங்களுக்கு அடிப்படை வசதிகள் இதுவரையில் பூர்த்தி செய்யப்படவில்லையெனவும் இதனால் தாங்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவித்தனர்.

குறிப்பாக, குடிநீர் பிரதேச சபையூடாக வழங்கப்படுகின்ற போதும், அது உரிய நேரத்திற்கு கிடைப்பதில்லை என்றும், அவசர தேவைக்கு குடிநீர் பெறுவதாயின் 10 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இயக்கச்சிக்கோ அல்லது பரந்தனுக்கோ செல்ல வேண்டும் எனத் தெரிவித்தனர்.

அத்துடன், கிராமத்திற்கான பிரதான வீதியான தட்டுவன் கொட்டியிலிருந்து ஆனையிறவிற்கான 3.5 கிலோமீற்றர் நீளமான வீதி புனரமைக்கப்படாமல் இருப்பதால், போக்குவரத்துச் செய்யக் கடினமாக இருப்பதாவும் மழை காலங்களில் மிகவும் மோசமடைந்த நிலையில் வீதிகள் இருப்பதாகவும் மக்கள் கூறினார்கள். அத்துடன், தங்களுக்கு மின்சார வசதியும் இல்லையென மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில், பிரதேச செயலகத்துடன் தொடர்புகொண்டு கேட்டபொழுது,

தட்டுவன்கொட்டி கிராம மக்களுக்கான வீட்டுத் தேவைகள் வீட்டுத் திட்டங்கள் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. அத்துடன், வீடுகளும் புனரமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இம்மக்கள், கடந்த காலங்களில் குழாய் வழி நீரைப் பெற்றிருந்தனர். அதற்கமைய மீண்டும் குழாய் மூலம் நீர் வழங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போது, அம்மக்களுக்கான குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும்.

அத்துடன், மக்களின் வீதிப்போக்குவரத்து மற்றும் மின்சார வசதிகள் தொடர்பில் படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X