2025 ஜூலை 17, வியாழக்கிழமை

குடிநீர் விநியோகத்திற்கான வாகனம், நீர்த்தாங்கிகள் வேண்டும்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரத்தினம் கனகராஜ், சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்ட மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட 8 கிராமங்களுக்கு குடிநீர் வழங்க போதியளவு விநியோக வாகனங்கள் மற்றும் நீர்த்தாங்கிகள் இன்மையால் பொதுமக்களுக்கு நிறைவான சேவையை வழங்க முடியாதுள்ளதாக மாந்தை கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் அம்பலவாணன் தனிநாயகம் திங்கட்கிழமை (18) தெரிவித்தார்.

மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 15 கிராமஅலுலர் பிரிவு காணப்படுவதுடன், அவற்றில் 8 கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வசதிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.

பொன்னகர், பூவரசங்குளம், விநாயகர்புரம், நெட்டாங்கண்டல், கரும்புள்ளியன், கொல்லவிளாங்குளம், அம்பாள்புரம், ஒட்டறுத்த குளம், பாண்டியன் குளம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் 1,500இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளவேண்டும். 

மாந்தை கிழக்குப் பிரதேச சபையிடம் தற்போது 3,500 லீற்றர் கொள்ளளவு கொண்ட 2 சிறிய விநியோக வாகனங்கள் மட்டுமே காணப்படுகின்றது. இதனைக் கொண்டு மேற்படி கிராமங்களுக்கு குடிநீரை முழுமையாக வழங்க முடியாதுள்ளது.

இது தொடர்பாக முல்லை மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மாவட்டச் செயலாளர், நீர் வழங்குவதற்குரிய நிதியை ஒதுக்கீடு செய்து தந்தார். ஆனால், அந்நிதியைக் கொண்டு வாகனங்களையோ அல்லது நீர்த்தாங்கிகளையோ கொள்வனவு செய்ய முடியாதுள்ளது.

எனவே எமது சேவையை நிறைவாக செய்ய அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், புலம்பெயர் உறவுகளும் உதவி செய்ய வேண்டும் என தவிசாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X