2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு, வடமாகாண சுகாதார அமைச்சர் விஜயம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு, வடமாகாண சுகாதார அமைச்சர் பா. சத்தியலிங்கம் இன்று திங்கட்கிழமை (18) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரஜனி அன்ரன் சிசில், மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ரூபன் லெம்பேட், மன்னார் வைத்தியசாலையின் நிர்வாக அலுவலகர் எஸ்.என்.எம்.சஜானி ஆகியோரை சந்தித்து மன்னார் பொது வைத்தியசாலையின் குறித்து கலந்துரையாடினார்.

குறிப்பாக மன்னார் பொது வைத்தியசாலையில் நிலவிவரும் பிரச்சினைகள் தொடர்பாகவும், வைத்தியசாலையின் குறைகள் தொடர்பாகவும் அதனை நிவர்த்தி செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கேட்டறிந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.ஆர்.ஜுட் கலந்து கொண்டிருந்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X