2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மன்னார் பிரதேச சபையின் புதிய உறுப்பினராக இஸ்ஸதீன் தெரிவு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதேச சபையின் புதிய உறுப்பினராக முஹம்மது இஸ்மாயில் முஹம்மது இஸ்ஸதீன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம், தேர்தல் ஆணையாளரின் அனுமதியுடன் இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பாக கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட அப்துல் முத்தலிப் முஹம்மது றிஷாபி, மேற்படிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவரது வெற்றிடத்துக்கே இஸ்ஸதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்த அப்துல் முத்தலிப் முஹம்மது றிஷாபி, கடந்த வடமாகாண சபைத் தேர்தலின்போது அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டதாகவும் இது தொடர்பான ஆதாரங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடத்திற்கு வழங்கப்பட்டது.

இது தொடர்பில் விசாரிப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் அவருக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும் அவர் அதற்கு சமூகமளிக்கவில்லை. இது தொடர்பில் ஆராய்ந்த பின்னரே அவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு அக்கட்சி தீர்மானித்ததாக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹஸன் அலியினால் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டது.

அத்துடன், பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குமாறும் அந்த வெற்றிடத்துக்கு இஸ்ஸதீன் என்பவரரை நியமிக்குமாறும் அவ்வறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்படிப் பரிந்துரைக்கு அமைவாக, புதிய உறுப்பினரின் பெயரை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையாளர், மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளர் அரவிந்த ராஜ் ஊடாக முஸ்லிம் காங்கிரஸுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பபினர் முத்தலிப்பாபா பாறுக் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X