2025 ஜூலை 17, வியாழக்கிழமை

முள்ளிவாய்க்காலில் மர்மப்பொருள் வெடிப்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

முல்லைத்தீவு, வெள்ளாமுள்ளிவாய்க்கால் பகுதி வீட்டுக் காணியொன்றில் நேற்று திங்கட்கிழமை (18), மர்மப்பொருளொன்று வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது வீட்டை துப்பரவு செய்து விட்டு அக்குப்பைகளுக்கு தீயிட்டபோதே இந்த மர்மப் பொருள் வெடித்துள்ளது. சம்பவத்தில் வேலு செந்தில்நாதன் என்ற குடும்பஸ்தரே காயமடைந்துள்ளார்.

உடலில் பல இடங்களிலும் காயமடைந்துள்ள இவர் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துக்கள் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த வவுனியா பொலிஸார், இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X