2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பண்டாரவன்னியனின் ஞாபகார்த்த விழா

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

தேசிய வீரன் பண்டாரவன்னியனின் ஞாபகார்த்த விழா எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய, காலை 8.30 மணிக்கு வவுனியா மாவட்ட செலயக வளாகத்தில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வவுனியா கலாசார மண்டபம் வரை ஊhவலம் செல்லவுள்ளது. ஊர்வலத்தை தொடர்ந்து கலாசார மண்டபத்தில் மேடை நிகழ்வுகள் நடத்;தப்படவுள்ளன.

இந்நிகழ்வில், வரவேற்புரையை மகள்சேவை மாமணி நா.சேனாதிராஜாவும் வரவேற்பு நடனத்தை நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரி மாணவிகளும் வழங்கவுள்ளனர்.

இதேவேளை, தலைமையுரையை கலாபூசணம் இ.சிவசோதியும் நினைவுப்பேருரையை சிரேஷ்ட ஊடகவியலாளர் அருணா செல்லத்துரையும் கவி மன்றத்தை வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் தேசிய வீரன் பண்டரவன்னியன் நாடகத்தை வவுனியா கலைத்தொடர்பு மையமும் வழங்கவுள்ளது.

இந்நிகழ்வில், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.கே.பந்துல ஹரிச்சந்திர, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள்,  வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.சிற்றம்பலம், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அசங்க காஞ்சன குமார உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X