2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சிறுபோக அறுவடை பாதிப்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களுக்கு பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை (19) பெய்த மழையால் சிறுபோகச் செய்கையின் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக இரணைமடுக் குளத்தின் கீழ் பயிர்ச் செய்கை மேற்கொண்ட விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இரணைமடுக் குளத்தில் உள்ள நீரின் அளவைக் கொண்டு 450 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் பயிர்ச் செய்கையில் 84 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த வாரம் நெல் அறுவடை செய்யப்பட்டது.

இந்நிலையில், மிகுதி ஏக்கர்களின் நெல் அறுவடை படிப்படியாக மேற்கொள்ளப்படவிருந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (19), 20 நிமிடங்கள் வரையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மழை பெய்தது.

இதனால், அறுவடைக்குத் தயாரான நெல் அழிவடையும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். அத்துடன், சிறுபோகத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல், எதிர்வரும் காலபோகத்திற்கான விதை நெல்லாகப் பயன்படுத்தப்படவுள்ளது.

ஆகவே, அதற்கு உலர்ந்த காலநிலை தேவையென்பதால், திடீர் காலநிலை மாற்றம் அதற்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X