2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பொருத்தமாக இடத்தில் பொலிஸ் நிலையத்தை அமைக்குமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கான நிரந்தரக் கட்டிடத்தை மக்கள் வாழும் குடியிருப்பு பிரதேசங்களில் அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முள்ளியவளை பொலிஸ் நிலையம் தற்போது தண்ணீரூற்று பிரதேசத்தில் (தண்ணீரூற்று கிறிஸ்தவ ஆலயத்திற்கு முன்னால்) தற்காலிகமாக இயங்கி வருகின்றது.

இந்நிலையில், குறித்த பொலிஸ் நிலையத்துக்கான நிரந்தரக் கட்டிடம் நிர்மானிப்பதற்கு முள்ளியவளை ஐயனார் குடியிருப்பு பிரதேசத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடமானது மக்கள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதியாகும்.

கேப்பாப்பிலவு, வற்றாப்பளை, குமாரபுரம், ஹிஜ்ராபுரம், நீராவிப்பிட்டி கிழக்கு, நீராவிப்பிடடி மேற்கு, தண்ணீரூற்று கிழக்கு, தண்ணீரூற்று மேற்கு, மாமூலை, கணுக்கேணி மேற்கு, கணுக்கேணி கிழக்கு, மதவாளசிங்கன்குளம், முள்ளியவளை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மத்தி ஆகிய கிராமங்களை உள்ளடங்கிய வகையில் குறித்த பொலிஸ் நிலையம் இயங்கி வருகிறது.

இதேவேளை, தற்போது உள்ள இடத்திலேயே முள்ளியவளை பொலிஸ் நிலையம் நிரந்தரமாக இருப்பது சகலருக்கும் பொருத்தமானதாகும் என குறிப்பிடும் மக்கள், தற்போது உள்ள இடத்தில் அல்லது அதற்கு அண்மித்ததொரு இடத்தில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கான நிரந்தரக் கட்டடத்தை அமைக்குமாறும் கேட்டுள்ளனர்.

மக்கள் தெரிவிக்கும் இப்பிரச்சினை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பொலிஸ் உயரதிகாரியொருவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, முள்ளியவளை பொலிஸ் நிலையம் தற்போது உள்ள இடத்திலோ அல்லது அதனை அண்டிய பகுதியிலோ இருப்பதுதான் பொருத்தம் என்பதை நாமும் உணர்ந்துள்ளோம்.

எனினும், முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு நிரந்தர கட்டடங்களை அமைப்பதற்குரிய இடவசதியை அரசாங்கத்திடம் கேட்ட போது அதற்கு பொருத்தமான இடம் முள்ளியவளை ஐயனார்குடியிருப்புதான் என கூறி உரிய இடப்பரப்பினையும் ஒதுக்கித் தந்துள்ளது என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X