2025 ஜூலை 17, வியாழக்கிழமை

துணுக்காயில் சுற்றுலா நீதிமன்றம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் நலன் கருதி எதிர்வரும் செப்டம்பர் 3ஆம் துணுக்காய் பிரதேச செயலக கட்டிடத்தில் சுற்றுலா நீதிமன்றமும், மத்தியஸ்த சபையும் அமைக்கப்படவுள்ளது.

துணுக்காய் பிரதேச செயலகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள துணுக்காய் மத்தியஸ்த சபையை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அன்றைய தினம் பிரதேச செயலக கட்டிடத்திலேயே சுற்றுலா நீதிமன்றம் இயங்கும் என்பதுடன் துணுக்காய், மாங்குளம், மல்லாவிப்பகுதியை சேர்ந்த பொதுமக்களின் வழக்கு விசாரணைகளும் துணுக்காய் பிரதேச செயலக கட்டிடத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்தியஸ்த சபையை ஆரம்பித்து வைப்பதன் மூலம் மிக நீண்டதுரம் பயணம் செய்து வழக்குகளுக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தை நாடும் பொதுமக்கள் தமது பிணக்குகளையும் காசு காணி சம்பந்தமான பிரச்சிணைகளை மத்தியஸ்த சபை மூலம் தீர்த்துக் கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X