2025 ஜூலை 17, வியாழக்கிழமை

முயற்சி இல்லையேல் சாதனையும் இல்லை: கே.பி

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 20 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


முயற்சி செய்யாவிட்டால் நாம் எதனையும் சாதிக்க முடியாது. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். அதன்மூலம் சாதனையாளர்களாக உருவாகுவீர்கள். சிறுவர்கள் சிறுபராயத்தில் இருந்தே முயற்சியுடைவர்களாக விளங்கி சாதனையாளர்களாக உருவாக வேண்டும் என நேர்ட்டோ நிறுவனத் தலைவரும் செஞ்சோலை இல்லத்தின் தந்தையுமான செ.பத்மநாதன் (கே.பி) செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார்.

செஞ்சோலை சிறுவர் இல்ல சிறுமிகளில், இம்மாதம் பிறந்த தினத்தைக் கொண்டாடுபவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் இரணைமடுவில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கே.பி, 'உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை உள்ளது. அந்த திறமையை வெளிக்கொண்டு வாருங்கள். ஒவ்வொருவரிடமும் இலை மறை காயாக திறமைகள் மறைந்துள்ளன. அவற்றினை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கின்ற போது, அவற்றைச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.

பல மாணவிகள் இந்த மேடையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி இருந்தார்கள். இருந்தபோதும், இது போதாது இன்னும் தேடல்களை மேற்கொண்டு கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, அவற்றின்  முன்னேற்றத்தினூடாக சிறந்த திறமையை வெளிப்படுத்துபவர்களாக வருவதற்கு முயற்சி செய்யுங்கள். முயற்சி செய்யாவிட்டால் நாம் எதனையும் சாதிக்க முடியாது. தொடர்ந்து முயற்சி செய்து படியுங்கள். வாழ்வில் முன்னேறுவீர்கள்.

உலகில் சூரியனை எப்படி மறைக்க முடியாதோ, அதுபோல் உண்மையை எப்போதும் மறைக்க முடியாது. எனவே எப்போதும் உண்மையையே பேசுங்கள். இது ஒரு குடும்பம். உங்கள் குடும்பத்திடம் மனம்விட்டுப் பேசுங்கள். மனம்விட்டு இந்தக் குடும்பத்திடம் பேசும் போது பிரச்சினைகள் விலகி சிறந்த மனிதர்களாக உருவாகுவீர்கள்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உங்கள் எதிர்காலம் பற்றிய கனவும் கவலையும் எனக்குரியது. அதனையிட்டு நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். எதற்கும் பயப்படாமல் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துங்கள். உங்கள் எதிர்காலத்தை சிறப்பானதாக அமைத்துத் தருவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். உங்களுடைய உயர்ச்சியே எங்களுடைய குறிக்கோள்' என அவர் மேலும் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X