2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரப் பயிற்சி

Super User   / 2014 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வி.தபேந்திரன்


உலக வங்கியின் 5.5 மில்லியன் ரூபாய் நிதியுதவியின் கீழ் சமூகசேவைகள் அமைச்சினால் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 மாத கால வாழ்வாதாரப் பயிற்சிகள் தற்போது கிளிநொச்சி தொழில்நுட்பக் கல்லூரியில்  வழங்கப்பட்டு வருகின்றன.

20 மாற்றுத் திறனாளிகளுக்கு தையல் பயிற்சி மற்றும் தொலைபேசி திருத்தல் போன்ற பயிற்சிகள் கடந்த ஜுலை மாதம் 28 ஆம் திகதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

பயிற்சியின் போது நாளாந்தம் 110 ரூபா ஊக்குவிப்புத் தொகை வழங்கப்பட்டுவருவதோடு பயிற்சி நிறைவில் 10,000 ரூபா பெறுமதியான சுயதொழில் உபகரணங்களும், அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் பொருத்தமான சுயதொழில் உதவிகளும் வழங்கப்படவுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X