2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மழை வேண்டி பொங்கல் வைக்கும் நிகழ்வு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மாவட்டத்தில் வரட்சியான நிலையினால் குளங்களில் நீர்வற்றி நன்னீர் மீனவர்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் மழை வேண்டி பொங்கல் வைக்கும் நிகழ்வு இன்று (22) அதிகாலை இடம்பெற்றது.

வவுனியா குளத்தில் மீன்பிடியில் ஈடுபடும் நன்னீர் மீன்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பொங்கல் நிகழ்வில் வவுனியா களத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் அனைவரும் இன மத பேதமின்றி கலந்து சிறப்பித்திருந்தனர்.

இதேவேளை, வவுனியாவில் சிறிய குளங்களில் நீர் முழுமையாக வற்றியுள்ளதுடன் பாரிய குளங்களில் நீர்மட்டம் மிக மோசமாக குறைந்துள்ளமையினால் நன்னீர் மீன்பிடிப்பாளர் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X