2025 ஜூலை 17, வியாழக்கிழமை

குளத்து மீன் உண்பதை நிறுத்துங்கள்: வவுனியா அரசாங்க அதிபர்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தில் குளங்கள் வற்றிக் காணப்படுவதனால் குளத்து மீன்கள் உண்பதை பொது மக்கள் தவிர்த்துக்கொள்ளுமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர, நேற்று (22) தெரிவித்தார்.

இது தொடர்பாக அரசாங்க அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் தற்போது வரட்சியான சூழல் காணப்பட்டு வருகின்றமையால் குளங்களில் நீர் வற்றிக்காணப்படுகின்றது.

இந் நிலையில் குளத்து மீன்கள் உண்பதனை தவிர்ப்பதன் மூலமாக நோய்கள் வருவதை தடுக்க கூடியதாக இருக்கும்.
அத்துடன் குளத்தில் அதிகளவான மீன்கள் இறந்து காணப்படுகின்றன.

இந் நிலையில் இறந்த மீன்களும் விற்பனைக்கு வரக்கூடிய சந்தர்ப்பம் உள்ளமையினால் மழை பெய்து குளங்களில் நீர் நிரம்பியதன்  பின்னர் குளத்து மீன்கள் உண்ணுமாறு கோரியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X