2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இளைஞர் சேவைகள் மன்றத்தில் அரசியல் தலையீடுகள்: மாவட்ட இளைஞர் சம்மேளன தலைவர்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


இளைஞர் சேவைகள் மன்றத்தில் வட மாகாணத்தை பொறுத்தவரையில் அரசியல் தலையீடுகள் உள்ளது என வவுனியா மாவட்ட இளைஞர் சேவைகள் சம்மேளனத்தின் தலைவர் ரி. அமுதராஜ், இன்று (23) குற்றம் சாட்டினார்.

இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா அலுவகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் எம்மால் நடத்தப்படும் விளையாட்டு நிகழ்வுகளுக்கோ பொது நிகழ்வுகளுக்கோ நகரசபை மைதானத்துக்;கு நிதியை செலுத்தவேண்டியுள்ளது.

நாம் அரச நிறுவனமாக உள்ளபோதிலும் எம்மிடம் பொது மைதானத்துக்;காக பணத்தை நகரசபை பெறுகின்றது.  அவ்வாறு பெற்றபோதிலும் சுதந்திரமாக நாம் நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

அண்மையில் தேசிய மட்ட கபடிப்போட்டியை நாம் நடத்திபோது பலவிதமான இடையூறு எமக்கு வழங்கப்பட்டது. ஆனால், இராணுவத்தினர், பொலிஸார், அரசியல்வாதிகளின் நிகழ்வுகளுக்கு மைதானத்தில் கொடிக்கம்பங்கள் அமைக்கவும் மேடை அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டபோதிலும் நாம் கொடி கம்பங்கள் அமைப்பதற்கு அனுமதிகள் வழங்கப்படுவதில்லை.

வவுனியா நகரசபை பொது விளையாட்டு மைதானம் நகரசபை நிர்வாகத்தின் கீழ் உள்ளதா அல்லது வவுனியா மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தரான லலித் ஜெயசேகர என்பவரின் கீழ் உள்ளதா என்பதே சந்தேகமாக உள்ளது.

மாவட்ட இளைஞர் சம்மேளனம் என்பது இளைஞர் சேவை மன்றத்தின் முக்கிய ஒரு விடயமாகும். அதில் உள்ள இளைஞர்கள் தேசிய இளைஞர் சேவை மன்றத்துக்கு தொண்டர் அடிப்படையில் செயற்பட்டு வருவதற்கு அவ் அமைப்பு உள்ளது.

அந்தவகையில் நாம் வவுனியா மாவட்ட இளைஞர் யுவதிகள் என்ற வகையில் பல வகையான பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றோம்.
குறிப்பாக இளைஞர் சேவைகள் மன்றத்தில் வட மாகாணத்தை பொறுத்தவரையில் அரசியல் தலையீடுகள் காரணமாக வவுனியா, மன்னார் மாவட்டங்கள் வன்னி எனவும் ஏனைய வட மாகணத்தில் உள்ள மாவட்டங்கள் வட மாகாணமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இளைஞர் சேவைகள் மன்றத்தில் இளைஞர் கழகங்களை பதிவு செய்யும் போது அவ் இளைஞர்கள் தமக்கு விளையாட்டுப்பொருட்கள் வழங்கப்படுமா என கேட்கின்றனர்.

ஆனால் அது உண்மையான விடயம். நாம் வேறு விடயங்களுக்காக அதிகளவான நிதியை செலவு செய்துள்ளமையால் இரண்டு வருட காலமாக விளையாட்டு உபகரணங்களை வழங்கியது இல்லை.

இது தொடர்பாக அமைச்சர்கள், மேலதிக மாகாண பணிப்பாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தியிருந்தோம்.  அந்தவேளையில் நாம் எமது தலைமைகளுடன் கதைத்தபோது உங்களுக்கு இரண்டு அமைச்சர்கள் என டக்ளஸ் தேவானந்தாவும் ரிசாட் பதியுர்தீனும் உள்ளார்கள் அவர்களிடம் நிதியை பெற்றுக்கொள்ளுங்கள் என கூறுகின்றனர்.

ஆனால், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாhளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதி என்ற வகையில் இயன்றளவு உதவியை எமக்கு செய்துள்ளார்கள்.

ஆனால், இரண்டு அமைச்சர்கள் இருந்தும் கூட வவுனியா மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் சம்மேளனத்துக்கு எவ்விதமான உதவிகளும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X