2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மாந்தை கிழக்கில் இரண்டு புதிய பாலங்கள்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டம், மாந்தை கிழக்குப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலிநகர் - பாண்டியன்குளம் வீதியிலுள்ள இரண்டு சிறிய பாலங்கள் பி.எஸ்.டி.ஜி (Pளுனுபு) நிதியத்தின் 4 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்டு வருவதாக வவுனிக்குளம் நீர்ப்பாசனப் பொறியியலாளர் திங்கட்கிழமை (25) தெரிவித்தார்.

மேற்படி வீதியானது நீர்ப்பாசனத் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாந்தை கிழக்குப் பிரதேச சபை ஆகியவற்றின் உரிமையின் கீழ் உள்ளது.

அந்தவகையில், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் வரும் மேற்படி இரண்டு சிறிய பாலங்களும் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் இதற்கான நிர்மாணப் பணிகள் இம்மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பமாகியதாகவும் தெரிவித்தார்.

மழை காலத்தைக் கருத்திற்கு கொண்டு இதன் நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X