2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மன்னாரில் திவிநெகும ஆரம்ப விழா

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


சமூர்த்தி அபிவிருத்தி அதிகார சபைய வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களமாக (திவிநெகும) மாற்றப்பட்டுள்ள நிலையில் அதன் தொடக்க விழா இன்று (26) செவ்வாய்க்கிழமை, மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

திவிநெகும திட்டத்தின் மன்னார் மாவட்ட மேலதிக பணிப்பாளர் நாயகமும்,மாவட்ட அரசாங்க அதிபருமான எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், அமைச்சர் றிஸாட் பதியுதீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாரூக், முத்தலிப் பாபா பாரூக், திவிநெகும திட்டத்தின் தலைமை மேலதிக பணிப்பாளர் நாயகம் ஆர்.எச்.ஏ.குமார சிறி, வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

சமூர்த்தி அபிவிருத்தி அதிகார சபை வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களமாக (திவிநெகும) கடந்த ஜனவரி மாதம் 03ஆம் திகதி மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரசபை வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களமாக (திவிநெகும) மாற்றப்பட்டுள்ள நிலையில் அதன் தொடக்க விழாவும், உத்தியோகஸ்தர்கள், சமூக மட்டத் தலைவர்களுக்கான விழிர்ப்புணர்வு செயலமர்வும் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வாழ்வின் எழுச்சி உத்தியோகஸ்தர்கள் 258 பேர் மற்றும் பிரதேச செயலாளர்கள், கிராம மட்ட அமைப்புக்கள், சமூகமட்டத் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X