2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஒட்டுசுட்டானில் பல்வேறு அபிவிருத்திகள்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகரத்தினம் கனகராஜ்

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்றத்தின் பின்னர் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ்.குருபரன் செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்தார்.

2010ஆம் ஆண்டு மீள்குடியேறுவதற்கு அனுமதியளிக்கப்பட்ட பின்னர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் 5,600 வரையிலான குடும்பங்கள் மீளக்குடியமர்ந்தனர்.

இதன் பின்னர், மக்களுக்குத் தேவையான குடிநீர், மலசலகூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் பொதுநோக்கு மண்டபம், முன்பள்ளி உள்ளிட்ட சமூக தேவைகளும் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில், பிரதேச செயலக பிரிவில் 111 குழாய்க் கிணறுகள் புதிததாக அமைக்கப்பட்டுள்ளதுடன், 23 பழைய குழாய்க் கிணறுகள் திருத்தம் செய்யப்பட்டன.

மேலும், 27 பொதுக்கிணறுகள் புதிதாக அமைக்கப்பட்டதுடன், 57 பொதுக் கிணறுகள் புனரமைப்புச் செய்யப்பட்டன. அத்துடன், மக்களின் தனிப்பட்ட நலன் கருதி 208 தனியார் கிணறுகளும் புனரமைப்புச் செய்யப்பட்டன.

அரச உதவியுடன் 45 மலசலகூடங்களும், அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதியுதவியில் 2681 மலசலகூடங்களும் என மொத்தம் 2,726 மலசலகூடங்கள் அமைக்கப்பட்டன.

யுத்தத்தால் சேதமடைந்த பொதுநோக்கு மண்டபம் ஒன்று அரச சார்பற்ற நிதியின் மூலம் புனரமைப்புச் செய்யப்பட்டதுடன், மேலும் ஒரு புதிய பொதுநோக்கு மண்டபம் அமைக்கப்படவுள்ளது.

அத்துடன், யுத்தத்தால் சேதமடைந்த 7 முன்பள்ளிகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டதுடன், மேலும் 8 முன்பள்ளிகள் புதிதாக அமைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X