2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் ஆலோசனைக் கூட்டம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


முச்சக்கர வண்டி ஓட்டுனர்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளப்படவுள்ள தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று வியாழக்கிழமை (28) மன்னார் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்றது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்படவுள்ள குறித்த வேலைத்திட்டம், மன்னார் மாவட்டத்திலும் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் திணைக்கள அதிகாரிகளிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே  குறித்த கூட்டம் இடம்பெற்றது.

முச்சக்கர வண்டி ஓட்டுனர்களை ஒன்றிணைத்து பொலிஸ், சுகாதார திணைக்கள அதிகாரிகள், பிரதேசச் செயலாளர்கள் மற்றும் அரச திணைக்கள பணியாளர்கள் ஒன்றிணைந்து குறித்த தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலாளர்கள் பிரிவுகளிலும் மேற்கொள்ளவுள்ளனர்.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி  ஸ்ரான்லி டிமேல், மாவட்ட உதவி செயலாளர் எம்.பரமதாஸ், பிரதேச செயலாளர்கள், பிரதேச முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X