2025 ஜூலை 16, புதன்கிழமை

' தேவ அழைத்தல்' கண்காட்சி மன்னார் ஆயரால் ஆரம்பிப்பு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மடுமாதா சிறிய குருமடம் ஸ்தாபிக்கப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியடைவதை எதிர்வரும் 15ஆம் திகதி கொண்டாடவுள்ள நிலையில் அதனையொட்டி  ' தேவ அழைத்தல்' எனும் கருப்பொருளில் கண்காட்சி ஒன்று சனிக்கிழமை மன்னார் மடுமாதா சிறிய குருமடத்தில் இன்று (30) ஆரம்பமானது.

இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான குறித்த கண்காட்சியை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். குறித்த காண்காட்சியை மன்னார் மறை மாவட்ட பங்கு மக்கள் ஏற்பாடு செய்துதிருந்தனர்.

குறித்த கண்காட்சியில் கத்தோலிக்க மக்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு சிறு நாடகங்களும் அரங்கேற்றப்பட்டது.

குறித்த கண்காட்சி இன்று சனிக்கிழமை (30) மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை (31) ஆகிய இரு தினங்களும் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மடுமாதா சிறிய குருமடம் ஸ்தாபிக்கப்பட்டு 25 வருடங்கள் பூர்தியடையும் நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிவிழா கொண்டாடப்படவுள்ளது.

வெள்ளிவிழா திருப்பலியை எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 5 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தலைமையில் திருவிழா திருப்பலி கூட்டு திருப்பலியாக ஒப்பு கொடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X