2025 ஜூலை 16, புதன்கிழமை

'முல்லைத்தீவு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் தகவல் பிரிவு'

Gavitha   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

பொதுமக்களின் பிரச்சினைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் தகவல் பிரிவொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பிக்க ஸ்ரீவர்தன வெள்ளிக்கிழமை (29) தெரிவித்தார்.

இந்த தகவல் பிரிவின் மூலம் முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்குட்பட்ட கிராமங்களில் இடம்பெறும் பல்வேறு குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

எனவே, பொதுமக்கள் தமது கிராமங்களில் காணப்படும் குற்றச்செயல்கள் பற்றி முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைக்கப்படவுள்ள தகவல் பிரிவுக்கு தெரியப்படுத்துமாறும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு பொதுமக்கள் தெரிவிக்கும் முறைப்பாடுகளை அல்லது தெரியப்படும் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கென இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த இரண்டு குழுவினரும் எந்த நேரமும் கடமையில் இருப்பார்கள் எனவும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X