2025 ஜூலை 16, புதன்கிழமை

திவிநெகும தேசிய திட்டத்தின் கீழ் முசலி-அகத்தி முரிப்பு கிராமத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார், முசலி பிரதேச சபைக்குட்பட்ட அகத்தி முரிப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள அலக்கட்டு கிராமத்தில் தற்போது  மீள்குடியேறி வரும் மக்களின் பிரச்சினையாக காணப்பட்ட பாதை மற்றும் மின்சார தேவைகளை நிறைவு செய்யும் முகமாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான றிசாட் பதியுதினின் பணிப்புரையின் பேரில் முசலி பிரதேச சபை தவிசாளர் எம்.எஹியான் நேற்று (29) ஆரம்பித்து வைத்தார்.

தற்போது குறித்த கிராமத்திற்கான பாதைகள் அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தொடர்ச்சியாக ஏனைய வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்படும் என முசலி பிரதேச சபை தவிசாளர் எம்.எஹியான் தெரிவித்தார்.

 இந்நிகழ்வில் அகத்தி முரிப்பு கிராமத்தின் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் கிராம அபிவிருத்தி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து  கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X