2025 ஜூலை 16, புதன்கிழமை

பண்டாரவன்னியனுக்கு சிலை அமைக்க கோரிக்கை

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வன்னியை இறுதியாக ஆண்ட தமிழ் மன்னனான பண்டாரவன்னியனுக்கு முல்லைத்தீவு நகரின் மத்தியில் சிலை அமைக்க வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி இந்தக் கோரிக்கையை  விடுத்ததாக வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று ஞாயிற்றுக்கிழமை  (31) தெரிவித்தார். 

இது தொடர்பில்  து.ரவிகரன் மேலும் தெரிவிக்கையில்,

'வன்னியை ஆண்ட இறுதி மன்னனான பண்டாரவன்னியனுக்கு முல்லைத்தீவு நகரின் மத்தியில் சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மக்களுடைய கோரிக்கைக்கு அமைய பண்டாரவன்னியனின் இராச்சியங்களில் ஒன்றாக விளங்கிய முல்லைத்தீவு நகரில் இந்த மன்னனுக்கு சிலை அமைப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று  வடமாகாண முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான  அனுமதி கிடைத்த பின்னர் மாவீரன் பண்டாரவன்னியனுக்கு முல்லைத்தீவு நகரின் மத்தியில் கம்பீரமான சிலை அமைக்கப்படும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X