2025 ஜூலை 16, புதன்கிழமை

தனிநாயகம் அடிகளாரின் நினைவுதினம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் இறையடி சேர்ந்து 34ஆவது வருட  நினைவுதினம் மன்னாரில் இன்று திங்கட்கிழமை (01) அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், மன்னார் பழைய நூல்நிலையத்துக்கு  முன்பாக அமைக்கப்பட்டுள்ள தனிநாயகம் அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவர் அருட்திரு தமிழ்நேசன் அடிகளாரின்  தலைமையில் இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம், மன்னார் நகரசபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ், நகரசபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ், மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க், மன்னார் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர்  மஹாதேவ சர்மா தர்மகுமார குருக்கள், தமிழ்ச் சங்கத்தின் சிரேஷட உபதலைவர் ஜனாப் மக்கள் காதர், தமிழ்ச் சங்கத்தின் உதவிப் பொதுச் செயலாளர் திருமதி பெப்பி விக்ரர் லெம்பேட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X