2025 ஜூலை 16, புதன்கிழமை

வவுனியா பொது வைத்தியசாலைக்கு புதிய இணையத்தளம்

Thipaan   / 2014 செப்டெம்பர் 01 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வட மாகாணத்தில் பிரதான வைத்தியசாலையான வவுனியா பொது வைத்தியசாலைக்கான புதிய இணையத்தளம் இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வட மாகாண சுகாதார அமைச்சின் வவுனியா அலுவலகத்தில், வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கத்தால் இவ் இணையத்தளம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

www.genaralhospitalvavuniya.lk என்ற முகவரியை உடைய இவ் இணையத்தளம் வவுனியா வைத்தியசாலையின் சிகிச்சை பிரிவுகள், விசேட சிகிச்சை அலகுகள், வைத்தியர்களின் சேவையை பெறக்கூடிய வசதிகள், வைத்தியசாலையின் செயற்பாடுகளை உள்ளடக்கியதாக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நோயாளர்கள் வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தமது வைத்திய சேவைக்கான திகதி நேரம் என்பவறையும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் என வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளா வைத்திய கலாநிதி
கு. அகிலேந்திரன் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X