2025 ஜூலை 16, புதன்கிழமை

திவிநெகும எமக்கு கிடைத்த வரப்பிரசாதம் : ரிஷாத் பதியுதீன்

George   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


திவிநெகும என்ற புதிய திணைக்களத்தை உருவாக்கி, சமூர்த்தி அதிகாரிகள் எல்லோரையும் அந்த திவிநெகும திணைக்களத்தினுள் உள்வாங்கி, அவர்களை ஓய்வூதியம் பெறுகின்ற அதிகாரிகளாக மாற்றிய பெருமை அமைச்சர் பசில் ராஜபக்ஷவையே சேரும் என அமைச்சார் ரிஷாத் பதியுதீன்; தெரிவித்துள்ளார்.

திவிநெகும திட்டத்தின் கீழ் 'சஹன அருண' கடன் வழங்கும் திட்டம் நேற்று திங்கட்கட்கிழமை (01) அமைச்சரினால்  ஆரம்பித்து வைக்கப்பட்ட போது, உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

திவிநெகும திட்டத்தின் ஊடாக கிராமத்தில் இருக்கின்ற தனிநபரை, அவருடைய பொருளாதாரத்தை மேம்படுத்தி, கிராம மக்கள் பிரதேச ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் வளர்ந்து இந்த நாடு; தேசிய ரீதியாக பொருளாதாரத்தில் மேம்படுவதற்கு இந்தத்திட்டம் வழிவகுக்கின்றது.

எனவே இந்த அடிப்படையில் இந்த நாட்டின் சுற்றுலாத்துறை மேம்பாடைந்து கொண்டு போகின்றது. அதே போல ஏற்றுமதி அதிகரித்துச் செல்லுகின்றது. இந்த நாட்டின் முதலீடு அதிகரித்துச் செல்லுகின்றது.

இவ்வாறு இந்த நாட்டின் பொருளாதாரம் மேன்மையடைகின்ற நிலையில் இந்த மாவட்டத்தில் வாழுகின்ற குறிப்பாக மீன்பிடி, விவசாயம், வியாபாரத்தைச் செய்கின்ற மக்களாக காணப்படுகின்றனர்.

எனவே மீன்பிடி, விவசாயத்துறையை மேம்படுத்துகின்ற வகையில் சமூர்த்தி திட்டத்தின் ஊடாக எவ்வாறு மீன்பிடி, விவசாயத்துறையினை மேம்படுத்துவது என்ற சிந்திக்க வேண்டியுள்ளது. இத்திட்டங்களை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.

நாங்கள் திட்டமிட்ட ஒரு சமூகமாக, வரையறைக்குள் செலவு செய்கின்ற சமூகமாக, கிடைக்கின்ற வருமானங்களுக்குள் வாழ்ந்து காட்டுகின்ற சமூகமாக நாங்கள் இருக்க வேண்டும்.

வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக, மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக அல்லது வேறு தேவைக்காக வட்டிக்கு பணம் பெற்று, அதனை செலுத்த முடியாத நிலையில், எமது சொத்துக்களை விற்கின்ற நிலைக்கு நாம் வந்து விடக்கூடாது.

எனவே நீங்கள் புத்தி சாதுரியமாக நடந்து கொள்ள வேண்டும். எனவே இந்த சமூர்த்தி திட்டம், திவிநெகும திட்டம் இந்த மாவட்டத்திற்கு கிடைக்கப் பெற்றமையினால் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

மிகவும் இதய சுத்தியுடன் வேலை செய்கின்ற பல அதிகாரிகள் இங்கு இருக்கின்றார்கள். எல்லோரும் இணைந்து இந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஒத்துழைத்து ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X