2025 ஜூலை 16, புதன்கிழமை

வவுனியா மாவட்ட செயலருக்கு 'சிலந்தி' அச்சுறுத்தல்

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 02 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திரவின் வவுனியா வாசஸ்தலத்தில் கடும் விஷத்தன்மையுடைய சிலந்தி இருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

அந்த சிலந்தியை வனவள அதிகாரிகள் பிடித்து காட்டுக்குள் விட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூன்று அங்குலம் நீளமான சிலந்தியொன்று மாவட்ட செயலாளரின் அறையில் இருப்பதை அவரது வாசஸ்தலத்தில் கடமையாற்றுபவரே முதலில் கண்டுள்ளார்.

இதேவேளை, காலி பிரதேசத்தில் வைத்து தனக்கு கொலை அச்சுறுத்தல் விக்கப்பட்டதாக அவர், ஓகஸ்ட் 31ஆம் திகதி, பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

காலியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற போது, அவரது வீட்டு வாசலை மறித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ப்றாடோ ரக வாகனத்திலிருந்து இறங்கி வந்த சிறைச்சாலை அதிகாரிகள் இருவர், இந்த கொலை அச்சுறுத்தலை விடுத்துவிட்டுச் சென்றனர் என அவர், தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்த இருவரும் அரசாங்க அதிபரின் சகோதரர்கள் எனவும் இவர்களை கைது செய்த பொலிஸார், பிணையில் விடுவித்ததாகவும் காலி பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X