2025 ஜூலை 16, புதன்கிழமை

குளவி கொட்டியதில் இருவர் பாதிப்பு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலகக் கட்டிடத்தில் இருந்த குளவிகள் கொட்டியதில், பிரதேச செயலக பணியாளர்கள் இருவர், மல்லாவி வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (02) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
பணியாளர்களான எஸ்.சுஜீவன், என்.வரதலிங்கம் ஆகிய இருவருமே குளவிக்கொட்டிற்கு ஆளாகியுள்ளனர்.

பிரதேச செயலகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட 2 மாடிக் கட்டிடத் தொகுதியின் மேற்தளத்தில் பாரிய குளவிக்கூடு ஒன்று காணப்படுகின்றது.

மேற்படி குளவிக்கூடு காற்றினால் செவ்வாய்க்கிழமை (02) மாலை கலைந்தமையாலேயே குளவிகள் கலைந்து, மேற்படி இருவர் மீதும் கொட்டியுள்ளதாகத் தெரியவருகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X