2025 ஜூலை 16, புதன்கிழமை

விபத்தில் இராணுவ வீரர் பலி; வான் சாரதிக்கு விளக்கமறியல்

George   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் துவிச்சக்கரவண்டியில் ரோந்து சென்ற இராணுவ வீரர் மீது மோதி, அவர் உயிரிழக்க காரணமான வான் சாரதியை எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், புதன்கிழமை (03) உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி விபத்துச் சம்பந்தமாக விசாரணைகள் முழுமையாகப் பூர்த்தியாக்கப்படாமையால், சாரதியை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

துவிச்சக்கரவண்டியில் வீதி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் மீது பின்னால் வந்த ஹயஸ் ரக வான் மோதியுள்ளது. இதில் குருநாகலை சேர்ந்த ஆர்.டி.சுமிந்தகுமார் (வயது 32) என்ற இராணுவ வீரர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, வான் சாரதி, பளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (03) மதியம் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இதன் போதே  நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X