2025 ஜூலை 16, புதன்கிழமை

கால்நடை வளர்ப்பதற்கான இலகுகடன் திட்டம்

George   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி இராமநாதபுரம் புதுக்காட்டு பகுதியிலுள்ள கால்நடைப் பண்ணையாளர்களை மேம்படுத்தும் பொருட்டு, தெரிவு செய்யப்பட்ட 84 குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் இலகுகடன்கள் வழங்கப்படவுள்ளதாக, கிளிநொச்சி கால்நடை அபிவிருத்திச் சங்கம் புதன்கிழமை (03) தெரிவித்தது.

இந்த இலகு கடன் மூலம் கால்நடைகள், கால்நடைகளுக்குத் தேவையான கொட்டில்கள் அமைத்தல் மற்றும் தீவனம் ஆகியவற்றையும் கொள்வனவு செய்ய முடியும்.

கால்நடைகள் கொள்வனவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் கால்நடை அபிவிருத்திச் சங்கத்தினூடாக மேற்கொள்ளப்படும்.

பெற்றுக்கொள்ளும் கடன்களை இலகுமுறையில் திருப்பிச் செலுத்துவதற்கான வசதிகளும் பயனாளிகளுக்கு ஏற்படுத்தித் தரப்படும் என சங்கம் தெரிவித்தது.

அந்தவகையில் தெரிவு செய்யப்பட்ட 84 பயனாளிகளுக்கும் கால்நடைகள் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரியவருகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X