2025 ஜூலை 16, புதன்கிழமை

வெளிமாவட்ட மீனவர்களுக்கு அபராதம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 04 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

முல்லைத்தீவு, நாயாறு கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்கள் 12 பேருக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தால் தலா 3000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட 4 படகுகள், அதன் வெளியிணைப்பு இயந்திரங்கள், 3 சுருக்கு வலைகள், மின்பிறப்பாக்கி உள்ளிட்ட 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை அரசுடமையாக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்படி கடற்பரப்பில், சுருக்கு வலையை ஒளிக்கவர்ச்சியுடன் (ஒளி பாய்ச்சி மீன்பிடித்தல்) பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட புல்மோட்டை மற்றும் மதுரங்குளி பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள், புதன்கிழமை (03) அதிகாலை கடற்படையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டனர்.

இதன்பின்னர், மேற்படி 12 பேரும் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள பிரதிப்பணிப்பாளர் ஜே.சுதாகரன் வியாழக்கிழமை (04) தெரிவித்தார்.

இதுபோன்று, அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X