2025 ஜூலை 16, புதன்கிழமை

விபத்தில் மாணவன் பலி; சாரதிக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 04 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் பாடசாலை மாணவனை மோதிய கன்ரர் ரக வாகனச் சாரதியை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வகாப்தீன் வியாழக்கிழமை (04) உத்தரவிட்டார்.

கனரர் ரக வாகனத்தின் உரிமையைக் கொண்ட விற்பனை நிறுவனம், மாணவனின் மரணச் சடங்கு நடத்துவதற்கு 25 ஆயிரம் ரூபாய் தொகையை, நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு மாணவனின் குடும்பத்தாரிடம் வழங்கியது.

புதன்கிழமை (03) இடம்பெற்ற மேற்படி விபத்துச் சம்பவத்தில், முழங்காவில், சோலைநிலா குடியிருப்பைச் சேர்ந்த சு.தமிழ்மாறன் (வயது 07) என்ற மாணவன் உயிரிழந்தான்.

பஸ்ஸில் இருந்து இறங்கி, மாணவன் அந்த பஸ்ஸுக்கு முன்னால் சென்ற வேளை, பஸ்ஸை முந்திக்கொண்டு சென்ற கன்ரர் ரக வாகனம், மாணவனை மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த மாணவன், முழங்காவில் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்திருந்தார்.

இது தொடர்பில் கன்ரர் ரக வாகனச் சாரதியைக் கைது செய்த, முழங்காவில் பொலிஸார், கிளிநொச்சி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (04) ஆஜர்ப்படுத்தினார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X