2025 ஜூலை 16, புதன்கிழமை

நிலக்கடலை பிரித்தெடுக்கும் இயந்திரங்கள் வழங்கிவைப்பு

Thipaan   / 2014 செப்டெம்பர் 04 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஸ்மின்


நிலக்கடலையை பிரித்தெடுக்கும் மூன்று இயந்திரங்களை ஜெய்க்கா நிறுவனம் வழங்கியுள்ளதாக வடமாகாண விவசாய, கமத்தொழில், நீர்பாசனம், சுற்றாடல் வளத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று புதன்கிழமை(03) தெரிவித்தார்.

மேற்படி நிறுவனத்தால் வழங்கப்பட்ட மூன்று இயந்திரங்களில்  ஒன்று வவுனியாவுக்கும் இரண்டு முல்லைத்தீவுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கடலையை பிரித்தெடுக்கும் இயந்திரத்தை விவசாய அமைப்பினரிடம் கையளிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு மதவாளசிங்கன்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

விவசாயத்தில் குறிப்பாக நிலக்கடலையை உற்பத்தி செய்வதில் முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
இதனாலேயே முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இரண்டு இயந்திரத்தை வழங்கியுள்ளேன். அதில் ஒரு இயந்திரம் மாவட்ட விவசாய திணைக்களத்துக்கும், மற்றயது ஒன்றினைந்த பண்ணையாளர்கள் சங்கத்துக்கும் வழங்கப்பட்டுள்ளன.

உண்மையில் நாம் எந்த உணவை உட்கொண்டாலும் ஒரு அளவுக்கே அந்த உணவுகளை உண்போம். ஆனால், நிலக்கடலையை சாப்பிடும் போது அதில் எவருக்கும் சலிப்பு ஏற்படுவதில்லை. அந்தளவுக்கு நிலக்கடலையின் மகத்துவம் உள்ளது.

எனவே, ஒரு ஏக்கர் நிலத்தில் செய்யப்பட்ட நிலக்கடலையை விவசாயிகள் அறுவடை செய்யும் போது அதற்கு 15 ஆயிரம் ரூபாவை செலவிடுகிறார்கள்.

ஆனால், இந்த இயந்திரத்தை பயன்படுத்தி நிலக்கடலையை அறுவடை செய்யும் போது ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாவை சேமிக்கக் கூடியதாகவுள்ளது.

அத்துடன் ஒரே நேரத்தில் பல விவசாயிகள் நிலக்கடலையை அறுவடை செய்யும் போது கூலித் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த பல சிரமங்களை விவசாயிகள் எதிர்நோக்கக் கூடும் எனவே, இந்த இயந்திரத்தை பயன்படுத்துவதன் மூலம் நேரமும் மீதப்படுத்த முடியும் என்றார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X