2025 ஜூலை 16, புதன்கிழமை

மூன்று கிராமங்களுக்கான மின்னிணைப்பு அங்குரார்ப்பணம்

Thipaan   / 2014 செப்டெம்பர் 04 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர். ரஸ்மின்


முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாமூலை, பூதன்வயல், குமுழுமுனை ஆகிய மூன்று கிராமங்களுக்கும் புதிதாக மின் இணைப்பு நேற்று புதன்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு குறித்த  கிராமங்களுக்கான மின்சார இணைப்பை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாகவே குறித்த மூன்று கிராமங்களுக்கும் மின்சார வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் குறித்த கிராமங்களின் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக விடுத்து வந்த கோரிக்கையை அடுத்தே மின்சார வசதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X