2025 ஜூலை 16, புதன்கிழமை

தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


தமிழரசுக்கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டின் முன்னோடியாக வெள்ளிக்கிழமை (05) மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

64 வருட வரலாற்றை கொண்ட தமிழரசுக்கட்சியின் 15 தேசிய மாநாட்டின் மத்திய செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது. இதில் கட்சியின் உறுப்பினர்கள் 48 பேர் கலந்து கொண்டனர்.

இதன்போது, ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெறவுள்ள கூட்டத்தொடரில் தேசிய மாநாடு மற்றும் தமிழரசுக்கட்சியின் தீர்மானங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X